எமது துறையின் முன்மாதிரியாக திகழ்ந்த மாணவன் மா. சுரேந்திரன் பொருளியல்த் துறையில் மாணவர்களை சுயதொழிலுக்கு ஊக்கப்படுத்தும் சிறுவர்த்தகமும் முயற்ச்சியாண்மையும் என்ற கற்கை அலகினை வெற்றிகரமாக கற்று, சுய கைத்தொழில் ஒன்றை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடாத்தி இலங்கையில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட ‘உங்கள் முயற்ச்சியாண்மையின் கதையை எங்களுக்கு சொல்லுங்கள்” என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினைப் (ரூபா 100000.00) பெற்றுள்ளார். பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் தேசிய ரீதியில் இந்தப் பரிசினை பெற்றமைக்காக அவரை பாராட்டுகிறேன். பல்கலைக்கழக ஆணைக்குழு இவ்வாறான தொழில் முயற்ச்சி பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என தினமும் வலியுறுத்தி வருகின்றது. இம்மாணவனின் இந்த சாதனையானது ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இந்தப் பெருமையானது எமது பொருளியல்த் துறைக்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கும் பெருமையை உருவாக்கியுள்ளது. எமது துறை மாணவர்கள் செந்தக்காலில் நிற்ப்பதை ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இம்மாணவன் உறுதிப்படுத்தியுள்ளார்;. சமூகத்தின் அணைத்து பிரிவினரும் அவரை பாராட்டி பட்டதாரிகளை சுயதொழிலுக்கு ஊக்கப்படுத்துமாறு வேண்டுகிறேன்.